Wednesday, December 6, 2006

ஆதவனின் "காகித மலர்கள்"



காகித மலர்கள் பற்றி ஜெயமோகன்

"நகர வாழ்வின் அலுப்பையும் அதை வெல்ல மூளையை பயன்படுத்தும் போது ஏற்படும் எண்ணவலைப் பின்னலையும் நக்ர்புறக் கதாபாத்திரங்களின் கோழைத்தனத்தையும் சுயமையப் போக்கையும் அழுத்தமான எள்ளலுடன் சித்தரிக்கும் 'டெல்லி ' நாவல். "

வாசகர் வட்டம் ப்லொகிலிருந்து விமர்சின துளிகள்

விமர்சினம் செய்தவர்--சித்ரா ரமெஷ்

"நாவல் விசுவத்தை மையமாகக் கொண்டு விசுவத்தின் அம்மா அப்பா சகோதரர்கள் நண்பர்கள் என இவர்களைச் சுற்றி நடக்கிறதா? செல்லப்பாவைச் சுற்றி இயக்குகிறதா? இல்லை கணேசனைப் பற்றியா? என்பதை உணரும் முன் முடிந்து விடுகிறது. பல மனிதர்கள், அவர்களின் உள்மனம், வெளியுலக வேஷம், போடும் வித வித முகமூடிகள் இவற்றிற்கிடையில்ஆதவனின் நாவல் ஒரு கொலாஜ் வடிவ ஓவியமாக தீட்டப்பட்டிருக்கிறது. சிறு சிறு சிதறல்களாக பார்க்கும் போது இது எப்படி ஓவியமாகும் என்ற கேள்விக்குறி, ஆனால் முடிந்த பிறகு ஒரு அற்புதக் கலை வடிவம். இதுதான் ஆதவனின் காகித மலர்கள்நவீன வாழ்க்கையின் தவிர்க்க முடியாத ஒரு அம்சமான புலம் பெயர்தல். கிராமங்களை விட்டு நகரத்திற்கு நகரும் மனிதர்கள். எந்த இடத்தில் எப்படி வாழ்ந்தாலும் தன்ஆசார அனுஷ்டானங்களைக் கை விடாமல் வாழும் மத்தியதர பிராம்மணக் குடும்பங்கள்! அதன் உண்மையான அர்த்தங்கள் திரிந்து போய் வேறு விதமான வாழ்க்கையை தேர்ந்தெடுத்தப் பின்னும் தமிழ் நாட்டுக் கிராமத்தில் ஒரு அக்ரஹாரத்தில் வாழும் வாழ்க்கையைத் தொடரும் மேம்போக்கான மனிதர்கள். உள்மனதில் தோன்றும் எண்ணங்கள், வெளியில் அதற்கு முகப் பூச்சுப் பூசி காட்டும் நாசூக்குத்தனம், தன்னைப் பற்றிய சுய மதிப்பீடுகள்இ வாழ்க்கையைப் பற்றிய மதிப்பீடுகள், கண்ணோட்டங்கள், அவரவர்கள் இடத்திலிருந்து பார்க்கும் போது மாறுபடும் கோணங்கள். மனதிற்குள் எத்தனைப் பெரிய குப்பைத்தொட்டி ஒளிந்திருந்தாலும் வெளியில் ஒரு புன்னகைப் பூங்கொத்தை நீட்டி பொய்யான மதிபீடுகளால் தன்னை உயர்த்திக் கொள்ளுதல் போன்ற வாழ்க்கை சாகசங்களை தானே வெளியில் நின்று பார்த்து எழுதியிருக்கிறார்ஆதவன் என்பதை மட்டும் சற்றுப் புன்னகையோடும் வேதனையோடும் ரசிக்க முடிகிறது"

மேலும் படிக்க "http://vasagarvattam.blogspot.com/2006/12/blog-post_01.html"

யோசிக்க வைக்கும் வரிகள்

" தமிழர்கள் உங்களிடம் ஒற்றுமை கிடையாது.உங்களுக்கு ஒரு identity கிடையாது.ஒத்துமையா இல்லைனா எப்படி மத்திய அரசிடம் சண்டை போட்டு உங்க பங்கை வாங்குவிர்கள்"

இவ்வாக்கியகங்களை படிக்கும்பொழுது ,77ல் நம் தமிழகம் இருந்த நிலமையும்,இன்றும் பெரிதாக மாறி விடவில்லை என்பது நமக்கு புரிகிறது.கழகங்களின் "தமிழர்" "தமிழ்" கொள்கையில் ஒரளவு நன்மை இருக்குதுபானு நம்மை நினைக்க வைக்கும.

மேலும் autonomy பற்றி

"இந்தியாவில் உள்ள பெரிய பிரச்சனையே ' over centralisation' . -மத்திய அரசு எல்லா முடிவுகளையும் (முக்கிய முடிவுகள் உட்பட) எடுப்பது - .இதற்கு ஒரே வழி மாநிலங்களுக்கு உரிமைகள பகிர்ந்து கொடுப்பதுதான்"

இன்றும் 'autonomy' கோஷம் வலுபெறவில்லை. காஷ்மீர் மற்றும் சில மட்டும் கத்தி கொன்டு இருக்கின்றன,கத்துவது கேட்காது என்பதை உணர்ந்து.

இப்புத்தகத்தை படித்தவுடன் தோன்றும் வியப்பு "77ல் இப்படி எழுதினாரா !"

படிக்க ஆர்வமா ?
உடன் விலைக்கு வாங்கி, இரவல் வாங்கி எப்படியாவது படியுங்கள்.
கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்

No comments: